துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு தகுதி காயத்தால் விலகிய பிளிஸ்கோவா

துபாய்: ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய் டூட்டி ப்ரீ மகளிர் சர்வதேச  டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில்,  2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2-6,6-1,6-1 என்ற செட் கணக்கில், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா6-3,6-2 என சக நாட்டைச் சேர்ந்த பெட்ரா கிவிட்டோவாவை வென்றார்.

அமெரிக்காவின் கோகா காப், மேடிசன்கீஸ், ஜெசிகா பெகுலா, போலந்தின் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ,கரோலினா முச்சோவா ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்தனர். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ்-கோகா காப், ஜெசிகா பெகுலா- கரோலினா முச்சோவா, சபலென்கா-கிரெஜிகோவா மோதுகின்றனர். இதனிடையே இகா ஸ்வியாடெக்குடன் மோத இருந்த கரோலினா பிளிஸ்கோவா காயம் காரணமாக விலகினார். இதனால் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Stories: