×

உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் : இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம்

கெய்ரோ: எகிப்தில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஸ்கிமியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ஐஸ்வரி பிரதாப் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக கோப்பை தொடரில்,  இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த தொடரில் இந்தியா 4 தங்கப்பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இரட்டை பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நர்மதா-ருத்ராங்ஷ் ஏர் ரைபிள் பிரிவில் தங்கமும், ரிதம்-வருண் தோமர் இணை ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கமும் வென்று அசத்தினர். தொடர்ந்து, ஆடவர் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றார்.10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் வெண்கலம் வென்றார்.10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திலோத்தமா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.


Tags : Pratap Singh Thomar ,World Cup ,India , World Cup, Shooting, Gold, Indian player
× RELATED 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா;...