×

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை 40 வயது ஆண்டர்சன் மீண்டும் நம்பர் 1

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
2003ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஆண்டர்சன், 6வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். இதன் மூலமாக 1936ல் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் கிளாரி கிரிமெட் 40 வயதில் முதலிடம் பிடித்து படைத்த சாதனையை ஆண்டர்சன் (40 வயது, 207 நாள்) சமன் செய்துள்ளார்.

அவர் இதுவரை 178 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 682 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். டெஸ்ட் விக்கெட் வேட்டையில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்), ஷேன் வார்ன் (708) ஆகியோருக்கு அடுத்து 3வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷேன், ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் வகிக்கின்றனர்.

Tags : Anderson , 40-year-old Anderson is No. 1 again in Test bowling rankings
× RELATED கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்