×

13 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் எம்பிக்களுக்கு ஆண்டுதோறும் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகின்றது. 2023ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருது பெறும் எம்பிக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 13 எம்பிக்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘சன்சத் ரத்னா விருது பெறும் எம்பிக்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தங்களது செழுமையான அறிவாற்றலால் நாடாளுமன்ற செயல்முறையை செழுமைப்படுத்தட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Prime Minister felicitates 13 MPs with Sansad Ratna award
× RELATED வரும் 9ம் தேதி விஜயகாந்திற்கு...