×

ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் வாலிபர் கைது

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அப்போது கடலூரைச் சேர்ந்த நைமூர் ரகுமான் ஹபிபுல்லா (37), குவைத் செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே குவைத்துக்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து ஏமன் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்த நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹபிபுல்லா ஏமன் நாட்டிற்கு சென்று வந்திருந்து, அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் ஏமன் நாட்டு குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டுள்ளது மூலம் உறுதியானது.

இதையடுத்து பயணி நைமூர் ரகுமான் ஹபிபுல்லா பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது தான் குவைத்தில் பணியில் இருந்த போது, பணியின் நிமித்தமாக இரு முறை ஏமன் நாட்டிற்கு சென்று வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனால், கடலூர் பயணி நைமூர் ரகுமான் ஹபீபுல்லாவை கைது செய்தனர். மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஹபிபுல்லாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். அவருடைய செல்போன் பதிவுகளை ஆய்வு செய்வதோடு, எந்த வேலைக்காக குவைத் செல்கிறார் என்றும் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Cuddalore ,Yemen , Cuddalore youth who went to Yemen arrested
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்