×
Saravana Stores

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை: செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்பாக வில்லரசம்பட்டியில் கட்சி நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. பிரச்சாரம்  இன்னும் 3 நாட்களே உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட பிரசாரம் ஈரோடு பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாளை மறுநாள் ஈரோட்டில் தேர்தல் பிச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுப்பட உள்ளார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அதிமுகவின் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்தும் தற்போது நடைபெற்றுள்ள ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த 3 தினங்களில் எவ்விதமான பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் எனவும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது.     


Tags : Palanisamy ,Erode ,Eastern ,Chengottayan ,K. GP ,Munusami Int'l , Palanichami consults with party officials regarding Erode East by-election: Sengottaiyan, KP Munusamy and others participate
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்