செரீனாவுக்கு எதிராக ஆடியது மறக்க முடியாத தருணம்: கண்ணீர் மல்க விடைபெற்ற சானியா உருக்கம்

துபாய்: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் தொடரில் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து முதல் சுற்றில் களம் இறங்கினார். ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மிதோவா- எல்.சம்சோனோவா ஜோடி எதிர்த்து விளையாடிய சானியா ஜோடி4-6, 0-6 என நேர் செட்களில் எளிதில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த தோல்வியுடன் 36 வயதான  சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார். கண்ணீர்  மல்க விடைபெற்ற அவருக்கு ரசிகர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

ஓய்வு பற்றி சானியா பேசுகையில், என்னைப் பொறுத்தவரை, டென்னிஸ் எப்போதும் என்  வாழ்க்கையின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஒரு  தொழில்முறை வீராங்கனையாக நீங்கள் ஒரு டென்னிஸ் போட்டியில் தோல்வியடையலாம்,  பின்னர் திரும்பி வந்து மீண்டும் முயற்சி செய்யலாம். எனவே, தோல்வி பயம்  எப்போதும் இருந்ததில்லை. தோல்வி பயம் இருந்தால் விளையாட்டில் யாரும்  சாதிக்க முடியாது.

 நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாது என்று யாரும் உங்களிடம் சொல்ல விடாதீர்கள், இது தான் நான் இளம் பெண்களிடம் சொல்ல விரும்புகிறேன், என்றார்.மேலும் எனது டென்னிஸ் வாழ்க்கையில், செரீனாவுக்கு எதிராக விளையாடுவது எனது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம், என குறிப்பிட்டார். சானியா டென்னிஸ் வாழ்க்கையில், சுவிஸ் டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ்சுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் 3  உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஓய்வுக்கு பின் மகளிர்  ஐபிஎல்லில் பெங்களுரு அணியின் ஆலோசகராக பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: