திருவாரூர்: திருவாரூர் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனையோ மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளுக்கு சென்றிருந்தாலும் திருவாரூர் வந்திருப்பது தனி உணர்வு. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம் என்றும் கூறினார்.
