×

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவித்து தென்காட்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அய்யா வைகுண்டர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்ற புகழுக்குரியவர் ஆவார். மேலும் தமிழ்நாட்டில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் முக்கியமானவர் அய்யா வைகுண்டர் ஆவார்.  

இந்நிலையில் வருடம்தோறும் மாசி மாதம் 20ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வகையில் இந்தாண்டு மார்ச் 4ம் தேதி அய்யா வைகுண்டர் 190 வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்

Tags : Tenkasi ,Ayya Vaikunder Avatar Day , Announcement of local holiday on 4th March for Tenkasi district on the occasion of Ayya Vaikunder Avatar Day
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு