×

பெரியபாளையம் அருகே மணல் கடத்தலில் 3 மாட்டு வண்டி, டிராக்டர் பறிமுதல்

பெரியபாளையம்:  சட்டவிரோதமாக  மணல் அள்ளிய டிராக்டர், 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி ஆற்றைச் சுற்றி, மங்கலம், புதுப்பாளையம், காரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமக்கள் உள்ளன. ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி விவசாயிகள் காய்கனிகள், நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் சட்டவிரோதமாக ஒரு கும்பல் மணல் கடத்தி எருக்குவாய் காட்டுப் பகுதியை நோக்கி செல்வதாக ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள் வண்டிகளை விட்டுவிட்டு மணல் கடத்திவந்த டிராக்டரை விட்டு விட்டு ஆசாமிகள் தப்பி விட்டனர். இதில் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Periyapalayam , 3 bullock carts, tractor seized in sand smuggling near Periyapalayam
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...