×

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதத்தை குறைக்க புதிய மென்பொருள் செயலி இன்று முதல் அறிமுகம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் கால தாமதங்களை குறைக்க, புதிய மென்பொருள் செயலி இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல் ஒரு மணி நேரத்திற்கு 45 விமானங்களை இயக்க முடியும். மும்பை விமான நிலையத்தில் மட்டும் இம்முறை செயல்பாட்டில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க, விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு (ஏ-சிடிஎம்) எனும் புதிய மென்பொருள், இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சார்பில், சென்னை விமான நிலையத்தில் இந்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மென்பொருள், மும்பை விமான நிலையத்தில் செயல்பாட்டில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில்தான் இந்த மென்பொருள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஏ-சி.டி.எம்., மென்பொருள் பயன்படுத்துவதன் மூலமும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான பாதுகாப்பு துறை, விமான நிறுவனங்களின் அதிகாரிகள், கிரவுண்ட் லோடர்கள் எனப்படும் தரைப்பணியாளர்கள், வான்வொளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, ஒரே நேரத்தில் முடிவு எடுக்கும் போது, விமானங்கள் புறப்படுவதில் தாமதத்தை தவிர்ப்பதுடன், விரைவான விமான சேவையை விரைந்து அளிக்க முடியும். இந்த புதிய பொது தளத்தில், விமான நிறுத்தத்தில் இருந்து, விமானம் எப்போது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும், விமானம் ஓடுதளத்திற்கு செல்ல எவ்வளவு நேரமாகும், டாக்ஸிவேயில், விமானம்  காத்திருக்காமல், நேரடியாக ஓடுபாதைக்கு சென்று ஓட தொடங்கும்.

அதோடு விரைந்து வானில் பறக்க தொடங்கும். அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து, விமானம் வானில் பறப்பதற்கான, துல்லியமான முடிவை, இந்த பொதுத் தளம் உறுதி செய்யும். இதனால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறையும். அதோடு எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டு, செலவும் குறையும். பயணிகளுக்கு தாமதம் இல்லாமல்,  சிறந்த சேவைகள் வழங்குதல், விமான நிறுத்தங்களின் மேலாண்மையை, சிறப்பாக்குதல் உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதோடு முக்கியமாக, தற்போது சென்னை விமான நிலையத்தில், ஒரு மணி நேரத்திற்கு 35 விமான சேவைகள் இருந்தது. இன்று முதல் புதிய மென்பொருள் பயன்படுத்துவதால் 45 விமான சேவைகளாக அதிகரிக்கும்.

Tags : Chennai airport , A new software application has been introduced at the Chennai airport from today to reduce the delay in flight departures
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்