×

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐதராபாத்தில் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து ெசன்னை புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னை புறப்பட தயாரான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, ஐதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர்.

தொடர்ந்து அந்த விமானத்தை சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு தொடர்பான சந்தேகத்துக்குரிய பொருள் ஏதும் இல்லாததால், வெடிகுண்டு புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தொடர் விசாரணையில், அந்த விமானத்தில் ஏற மறுத்த பயணி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபரை ேபாலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai ,Pandemonium ,Hyderabad , Bomb threat to Chennai flight: Pandemonium in Hyderabad
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...