பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வரும் மார்ச் 5ம் தேதி மாசிக்கொடை விழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14ம் தேதி ஒடுக்குப்பூஜையுடன் கொடை நிறைவடைகிறது.

பல வருடமாக ஹைந்தவ சேவா சங்கம் நடத்தி வந்த சமய மாநாட்டை இந்த வருடம் அறநிலையத்துறை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஹைந்தவ சேவா சங்கம் அதிருப்தியடைந்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் அம்மனை தரிசனம் செய்த அவர் கோயில் வளாகம், பொங்கலிடும் பகுதி, சமய மாநாடு திடல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அமைச்சருடன் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், கோயில் மேலாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் சென்றனர். சமய மாநாடு நடத்துவது, திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குமாரகோயிலுக்கு சென்றார்.

Related Stories: