×

3வது டெஸ்டில் ஆஸி. அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு இடம்

மும்பை: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களுடன் ஆஸ்திரேலியா களத்தில் இறங்கவுள்ளது. மீதம் உள்ள 2 போட்டிகளிலாவது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு அணியின் ரசிகர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் உலகளவில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை வகிக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவால் 3 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் அணியில் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுகிறார். இதற்கிடையே, வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இவ்விருவரும் முக்கிய ஆட்டக்காரர்களாக பல்வேறு முறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி அடுத்த 2 போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, சொந்த வேலை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பியுள்ளார்.

Tags : Aussies , Aussies in the 3rd Test. Place for 2 key players in the team
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்