×

ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது மற்றும் கடைசி டெஸ்டில், 279 ரன் இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்து திணறி வருகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச… நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 256 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லாபுஷேன் 90 ரன் விளாசினார். நியூசி. பந்துவீச்சில் மேட் ஹென்றி 23 ஓவரில் 4 மெய்டன் உள்பட 67 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.94 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்திருந்தது. 3ம் நாளான நேற்று அந்த அணி 372 ரன் குவித்து ஆட்டமிழந்தது.

லாதம் 73, வில்லியம்சன் 51, ரச்சின் 82, டேரில் மிட்செல் 58, ஸ்காட் குகெலெஜின் 44 ரன் விளாசினர். ஆஸி. தரப்பில் கம்மின்ஸ் 4, லயன் 3, ஸ்டார்க், ஹேசல்வுட், கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி, 14.2 ஓவரில் 34 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடி வருகின்றனர். 3ம் நாள் முடிவில் ஆஸி. 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்துள்ளது (24 ஓவர்). ஹெட் 17, மார்ஷ் 27 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி, சியர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, ஆஸி. வெற்றிக்கு இன்னும் 202 ரன் தேவை என்ற நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல் appeared first on Dinakaran.

Tags : Aussies ,Christchurch ,New Zealand ,Australia ,Hackley Oval ,
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்