அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் 20 பேர் கொண்ட குழு ஆசிரமத்தில் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி எஸ்.பி. அருண் கோபாலன் தலைமையில் விசாரணை முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை, 16 பேர் காணாமல் போன விவகாரம், முறைகேடு புகார்களை தொடர்ந்து அப்பகுதி காவல்துறையினர் அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது பாலியல் பலாத்காரம், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜுபின் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசரணையை தமிழ்நாடு டிஜிபி சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தங்கியிருந்தவர்களின் விபரங்கள் உள்ளிட்டவற்றை செஞ்சி போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிபிசிஐடி எஸ்.பி. அருண் கோபாலன் தலைமையில் 20 பேர் கொண்ட குழிவினார் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் தடயவியல் துறையின் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரும் ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: