×

கிராமப் பகுதிகளில் மிளகாய் உலர்களம் அமைக்க வேண்டும்-ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம் :  ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரங்களில் மிளகாய் அதிகம் பயிரிடக் கூடிய கிராமப் பகுதிகளில் மிளகாய் உலர் களம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அதிகமான மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும் பிச்சனா கோட்டை, சிலுகவயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்ல மடை, சவேரியார் பட்டிணம், வல்லமடை, செங்குடி, பூலாங்குடி, வானியக்குடி, அரியான்கோட்டை, பணிதிவயல், நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான மிளகாய் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையக் கூடிய மிளகாய் வத்தலை ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒவ்வொரு சனி கிழமையும் நடைபெற கூடிய மிளகாய் சந்தையில் விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்வது வழக்கம். இந்த மிளகாய் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாகும். இங்கு நடைபெறும் சந்தைக்கு மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு மிளகாய் விவசாயம் செய்து, அந்த மிளகாய் பழங்களை பறித்து கண்மாய் கரை,வயல்வெளி, பொட்டல் காடுகள் என பல்வேறு இடங்களில் மண்ணில் உலர வைக்கின்றனர். இதனால் மிளகாய் ஒரு விதமான மங்கலான கலராகவும், வெள்ளையாக சோடை என சொல்வது போலும் மிளகாய் வந்தல்கள் தரம் குறைந்து காணப்படுகிறது.
அவ்வாறான மிளகாய் வத்தல் மார்க்கெட்டில் மிகவும் குறைந்த விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல், மன உளைச்சலுக்கும், நஷ்டத்திற்கும் ஆளாகின்றனர். ஆகையால் இந்நிலை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கிராமங்கள் தோறும் மிளகாய் உலர்களம் அமைத்து தந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : RS ,Mangalam , RS Mangalam: Chilli dry field should be set up in rural areas where chili can be cultivated in the surrounding areas of RS Mangalam.
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...