×

கட்சிக்கு வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்..!

இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார்.

இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஜாமீன் கோரி லாகூர் ஐகோரட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று லாகூர் கோர்ட்டில் ஆஜரானார்.

இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என தகவல் பரவிய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ஆதரவாக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி தாரிக் சலீம் ஷேக் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Lahore High Court ,Imran Khan , Lahore High Court granted bail to Imran Khan in the case of receiving foreign funds for the party..!
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்