×

சோகத்தின் வடு மறைவதற்குள் துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் : 3 பேர் பலி; 1000-க்கும் மேற்பட்டோர் காயம்!!

இஸ்தான்புல்: துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 46,000 கடந்துள்ளது. கட்டிட இடுபாடுகளை அகற்றும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து துருக்கி நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின், அங்குள்ள 11 மாகாணங்களில் 6,040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் 40 நிலநடுக்கம் 5 முதல் 6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அதில் உன்று 6.6 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தனர். அந்நாட்டின் நகர்புற மேம்பாட்டு துறை, ``ஒரு லட்சத்துக்கு 5 ஆயிரத்து 794 கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதில் 20,662 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகி உள்ளது. 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன,’’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்திய தரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஹடாய் மாகாணத்தில் அண்டக்யா என்ற இடத்தில் நேற்று இரவு 8.04 மணிக்கு  6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்த நிலையில், 1000த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது, கட்டிடங்கள் குலுங்கியதால் இரவு நேரத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறி சாலைகளில் முகாமிட்டனர். வீதிகளில் திரண்ட நோயாளிகள் பலருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.


Tags : Turkey , Turkey, earthquake, injury
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...