திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு: திருச்சி காவல் ஆணையர் சத்தியபிரியா விளக்கம்

திருச்சி: திருச்சியில் துரை மற்றும் சோமு ஆகிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என சம்பவ இடத்தை ஆய்வு செய்தபின் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா பேட்டியளித்துள்ளார்.

திருச்சி உறையூரில் குழுமாயி அம்மன் கோயில் அருகே காவலரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரை, சோமு ஆகியோர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் கைது நடவடிக்கையில் ஈடுபட்டது.

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது காவலர்களுடன் வாகனத்தில் பயணிக்கும்போது காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற காவலர் சிற்றரசை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்ற ரவுடிகள் துரைசாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம்  ஆகிய இருவரையும் போலீசார் சுட்டுக் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலரை வெட்டிய இரு ரவுடிகள் மீது துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கால் மற்றும் கையில் காயமடைந்த 2 ரவுடிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காவலர் சிற்றரசு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி துரை மீது 5 கொலை வழக்குகள் உள்பட 64 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

திருச்சியில் துரை மற்றும் சோமு ஆகிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என சம்பவ இடத்தை ஆய்வு செய்தபின் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா பேட்டியளித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். காலையில் இருவரையும் கைது செய்த நிலையில் தப்பியோட முயற்சி செய்தனர்.

அப்போது, போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கைது செய்தோம் என்றும் போலீசை தாக்கினால் நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: