ஈரோடு கிழக்கு தொகுதியில் மீன் வியாபாரிகளிடம் ரூபி மனோகரன் எம்எல்ஏ பிரசாரம்

நெல்லை : ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மீன் வியாபாரிகளிடம் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக் ஆதரவாக  அசோகபுரி குடிசை வாரியம், தோணி பாலம், மீன் மார்க்கெட் பகுதி, 51-வது வார்டு பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து சூரம்பட்டி வலசு ஏபிசி ஹாஸ்பிடல் 46-வது வார்டு பகுதியில் மாலையில் வீடு, வீடாக சென்று ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆதரவு திரட்டினார். அப்போது அங்குள்ள இஸ்திரி கடையில் இஸ்திரி போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

மாநில மகிளா காங்கிரஸ் சுதா ராமகிருஷ்ணன், சேலம் துணை மேயர் சாரதா தேவி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருசெல்வம், துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மண்டல தலைவர் சசிகுமார், காங்கிரஸ் தலைவி  ஞானதீபம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்டத் துணைத் தலைவர்கள்  செல்லப்பாண்டி, கக்கன், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை.

வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன், நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்புரோஸ், வள்ளியூர் கிழக்கு வட்டார தலைவர் பவான்ஸ், காங்கிரஸ் கவுன்சிலர்கள் தெய்வானை கனகராஜ், வனிதா காமராஜ், மரிய பிலியன்ஸ், மாவட்ட செயலாளர்கள் காமராஜ், வேலையா, சிங்கமுருகன், ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் எம்எம் ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வசந்தா, களக்காடு  வட்டார பொறுப்பாளர் பானு, ஸ்ரீதேவி, வேலம்மாள், விமலா, பாலம்மாள், சரண்யா, தனம், தங்கலெட்சுமி, காங்கிரஸ் நிர்வாகிகள் உச்சிமாகாளி, உடையார், முத்துபாண்டி, அன்னபாண்டி, பாஸ்கர், பெருமாள் தேவராஜ், பாலசுப்ரமணியன், ஐயப்பன், ஜெயகுமார், ஜாக்பர் மற்றும் ஈரோடு காங்கிரஸ் கமிட்டியின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Related Stories: