×

திருவண்ணாமலையில் உடைந்த, பயனற்ற செல்போன்கள், பழைய நோட்டு புத்தகங்களுக்கு கோழிக்குஞ்சுகள் விற்பனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உடைந்த மற்றும் பயனற்ற செல்போன்கள் மற்றும் பழைய நோட்டு புத்தகங்களுக்கு வியாபாரி ஒருவர் வண்ண கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருவண்ணாமலையை அடுத்த பரமணந்தல் கிராமத்தை சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்து வருகிறார்.

 இந்த நிலையில் அழிந்து வரும் கோழிக்குஞ்சு விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அவர் உடைந்த செல்போன்கள் மற்றும் பழைய நோட்டு புத்தகங்களுக்கு வண்ண கோழிக் குஞ்சுகளை வழங்கி வருகிறார். இதனை அறிந்து சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கோழிக்குஞ்சுகளை வாங்கி சென்றனர். அதே நேரத்தில் உடைந்த செல்போன்கள் இல்லாதவர்கள் ரூ.10 கொடுத்து கோழிக்குஞ்சுகளை வாங்கி செல்லலாம் என வியாபாரி கணேசன் தெரிவித்துள்ளார் அவரின் இந்த யுக்தி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, broken, useless cell phones, note books, chicks for sale
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...