×

ஜோஷிமத் அருகே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிய விரிசலால் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் கவலை

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் ஜோஷிமத் அருகே பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக ஏற்பட்டுள்ள விரிசல்களும், பள்ளங்களும் பக்தர்களை கவலை அடைய செய்துள்ளன. பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 4 புனித தளங்களுக்கான சார்தாம் யாத்திரைக்கான தேதிகளை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேதார்நாத் கோயில் ஏப்ரல் 5ம் தேதியும் பத்ரிநாத் கோயில் 27ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

சார்தாம் யாத்திரையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பத்ரிநாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் ஜோஷிமத் தொடங்கி மார்வாரி வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 10 விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த சாலை விரிசல்கள், பள்ளங்கள் மாவட்ட சாலை பராமரிப்பு அதிகாரிகளால் சீரமைத்த போதும் அவை மீண்டும் விரிசலாகி வருகின்றன. இதனிடையே ஜம்மு காஷ்மீரின் இராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 13 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தபட்டுள்ளன.


Tags : Padrinath highway ,Joshimad , Joshimath, Badrinath highway, new crack, devotees worried
× RELATED உத்தராகண்டில் மண்ணில் புதைந்து வரும்...