கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார். நாடு வீழ்ந்து கிடக்கிறது. பொதுமக்களின் பணத்தில் இயங்கக்கூடிய ஆயுள் காப்பீட்டு கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை அதானி குழுமத்தில் முதலீடு செய்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளது.
இந்த குழுமத்தில், முதலீடு செய்ய மோடி அலுவலகத்தின் அழுத்தமே காரணம். இந்த ஊழலும், முறைகேடும் அமெரிக்கா வரை பரவி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் ஒன்றரை வருட திமுக ஆட்சிக்கு சான்றிதழ் வழங்கும் தேர்தல். அதிமுகவை அவர்களே இயக்கினால் நன்றாக இருக்கும். அதிமுகவை பாஜக இயக்குவதால் தான் வீழ்ந்துள்ளது என்றார்.
