×

தேவாலயங்கள் மீதான தாக்குதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவர்கள் போராட்டம்

புதுடெல்லி: சட்டீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், வன்முறை மற்றும் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உ.பி.யை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் கிறித்துவர்கள் மீது 525 வழக்குகள் பதிவான நிலையில், கடந்தாண்டு 600 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் 2022 ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய ஆண்டு 70 ஆக மட்டுமே இருந்தது,’’ என்று தெரிவித்தார்.

Tags : Christians ,Delhi Jandar Mantar , Attack on churches Christians protest at Delhi Jandar Mantar
× RELATED தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு...