×

அனுஷ்காவுக்கு எந்த நோயும் இல்லை; நண்பர்கள் தகவல்

ஐதராபாத்: தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர், அனுஷ்கா. அவருக்கும், பான் இந்தியா ஸ்டார் பிரபாசுக்கும் பல வருடங்களாக காதல் தொடர்கிறது என்றும், விரைவில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகி வரும் நிலையில், திடீரென்று பிரபாஸுக்கும், பாலிவுட் நடிகை கிரித்தி சனோனுக்கும் இடையே ரகசிய காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையறிந்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற அனுஷ்கா, ‘ஏன் உங்களைப் பற்றி இப்படி நியூஸ் வருகிறது?’ என்று பிரபாஸை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரபாஸ், கிரித்தி சனோனுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார். இந்நிலையில், அரிய வகை நோயால் அனுஷ்கா அவதிப்படுவதாக செய்தி வெளியானது. அதாவது, அவருக்கு மிகவும் அரிதான சிரிக்கும் நோய் பீடித்துள்ளது என்றும், அவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், இத்தகவலில் உண்மை இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : Anushka , Anushka has no disease; Friends information
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...