×

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: அர்ஜுன் - கிளார்க் ஜோடி சாம்பியன்

சென்னை: ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் காதே - ஜே கிளார்க் (பிரிட்டன்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) - நினோ செர்டாருசிச் (குரோஷியா) ஜோடியுடன் நேற்று மோதிய அர்ஜுன் - கிளார்க் ஜோடி அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றியது. 2வது செட்டில் செபாஸ்டியன் - நினோ கடுமையாகப் போராடினாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன் - கிளார்க் இணை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விறுவிறுப்பான இப்போட்டி 54 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சுமித் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் நிகோலஸ் மொரெனோ டி அல்போரனுடன் நேற்று மோதிய இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல் 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் சக வீரர் டேன் ஸ்வீனியை வீழ்த்தினார். இன்று நடைபெறும் பைனலில் நிகோலஸ் அல்போரன் - மேக்ஸ் புர்செல் மோதுகின்றனர்.

Tags : Chennai Open ATP Challenger ,Arjun ,Clark , Chennai Open ATP Challenger: Arjun - Clark pair champion
× RELATED நான் Shock ஆகிட்டேன் ! Umapathy❤Aishwarya Arjun Wedding Get Together Meet | Arjun, Thambi Ramaiah.