×

இதே வேகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கினால் பாஜவை 100 தொகுதிக்குள் காங்கிரஸ் கட்டுப்படுத்தலாம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யோசனை

பாட்னா: இந்திய ஒற்றுமை யாத்திரை மூலமாக கிடைத்த வேகத்தை பயன்படுத்தி   கூட்டணியை உருவாக்கினால் அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார். பாட்னாவில்  நடந்த விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார்,” இந்திய ஒற்றுமை யாத்திரை நன்றாக நடந்தது என்பதை காங்கிரசில் உள்ள நண்பர்களுக்கு கூற விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி ஓய்வெடுக்காமல் ஒற்றுமை யாத்திரையின் மூலமாக கிடைத்த வேகத்தை பயன்படுத்தி பாஜவிற்கு எதிரான கட்சிகளின் கூட்டணியை உருவாக்க  வேண்டும். இதன் மூலமாக மக்களவையில் 300 என்ற எண்ணிக்கையில் உள்ள பாஜவின் பெரும்பான்மையை அடுத்த ஆண்டு பொது தேர்தலில் 100க்குள் கட்டுப்படுத்த முடியும். எனது அறிவுரைக்கு செவிசாய்த்தால் அது நாட்டிற்கும் பாஜவின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கும் நன்மை பயக்கும்.” என்றார்.


Tags : Congress ,BJP ,Bihar ,Chief Minister ,Nitish Kumar , Congress can control BJP within 100 seats if new alliance is formed at similar pace: Bihar Chief Minister Nitish Kumar
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...