×

சிவராத்திரி, அமாவாசை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

அண்ணாநகர்: சிவராத்திரி, அமாவாசை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முல்லை 800க்கும் ஜாதிமல்லி 800க்கும் பன்னீர் ரோஸ் 100க்கும் சாக்லேட் ரோஸ் 120க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி 50க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாளை அமாவாசை என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ முல்லை 1,000க்கும் ஜாதிமல்லி 1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 140க்கும் பன்னீர் ரோஸ் 120க்கும் சாக்லேட் ரோஸ் 130க்கும் சம்பங்கி 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்தது. மல்லி, ஜாதிமல்லி, முல்லை மற்றும் கனகாம்பரம், அரளி ஆகியவற்றின் விலை உயர்ந்தது. நாளை அமாவாசை என்பதால் முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, சம்பங்கி, பன்னீர்ரோஸ் சாக்லேட் ரோஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த பூக்களின் விலை உயர்வு நாளை வரை நீடிக்கும். அமாவாசை முடிந்தபிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும். இவ்வாறு தெரிவித்தார்.

வெங்காயம் விலை கடும் சரிவு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் வெங்காயம் வந்து குவிந்துள்ளன. சென்ற மாதம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30க்கும் சாம்பார் வெங்காயம் 60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை ஒரு கிலோ பெரிய வெங்காயம் 14 ரூபாய்க்கும் சாம்பார் வெங்காயம் 30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறும்போது, “வரத்து அதிகரிப்பால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 48 வாகனங்களில் இருந்து 1,200 டன் வெங்காயம் வந்து குவிந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கடந்த ஒருவாரமாக கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதம் விலை குறைவு நீடிக்கும்’’ என்றார்.

Tags : Koyambedu ,Shivratri ,Amavasi , Price hike of flowers in Koyambedu market ahead of Shivratri and Amavasi
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...