×

தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன..!!

போபால்: தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிபுலிகள் மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இதை அடுத்து இந்தியாவில் உள்ள சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது. இன்று காலை 6.17 ராணுவ விமானம் மூலமாக அவை மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்த ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு சிவிங்கி புலிகள் சென்று சேர்ந்துள்ளன.

வனவிலங்குகள் சட்டத்தின்படி அடுத்த ஒரு மாதம் தனிமைபடுத்தப்பட்டிருக்கும் சிவிங்கி புலிகள் பின்னர் வனப்பகுதிக்குள் சுதந்திரமாக விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுதந்திரத்திற்கு முன் நாடு முழுவதும் இருந்த சிவிங்கி புலிகள் கண்மூடித்தனமாக வேட்டையாடப்பட்டதால் அழிந்துவிட்டன. அந்த இனத்தில் கடைசி புலி இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு உயிரிழந்தது. இதை அடுத்து 1952ல் சிவிங்கி புலி இனம்  முற்றிலுமாக அழிந்துவிட்டதாக இந்தியா அறிவித்தது.

மீண்டும்  சிவிங்கிபுலிகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதற்கட்டமாக எட்டு சிவிங்கிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. இந்திய வன சூழலுக்கு அவை பழகியதற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இயற்கை சூழலில் விடப்பட்டுள்ளன. இதை அடுத்து இரண்டாவது கட்டமாக தற்போது மேலும் பனிரெண்டு சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 7 ஆண்புலிகள் 5 பெண்புலிகள் ஆகும்.


Tags : South Africa ,Kuno National Park , South Africa, helicopters, chives, Kuno National Park
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...