×

மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!!

கோவை: மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவை வந்தடைந்தார். மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் காவல்துறை இயக்குநர், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.


Tags : President ,Troubati Murmu ,Cove ,Madurai , Coimbatore, Republic President Draupadi Murmu
× RELATED இனிமேல் வாழ்க்கையில் விமான...