கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்..!!

சேலம்: கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். உடலை பிரேதப் பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மீனவர் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Related Stories: