×

திரிபுரா தேர்தலில் 88% வாக்குப்பதிவு

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 88 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலாயா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 60 தொகுதியிலும் உள்ள 28.14 லட்சம் வாக்காளர்களில் 24.66 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 87.63 சதவீதம் ஆகும். இருப்பினும் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 89.38 சதவீத வாக்குகள் பதிவானது. 2013ம் ஆண்டு தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதை விட இந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.

முதல்வர் மாணிக் சாகா போட்டியிடும் டவுண் பர்டோவாலி தொகுதியில் மிகவும் குறைவாக 80 சதவீதமும், அதிகபட்சமாக தெற்கு திரிபுராவில் உள் மனு தொகுதியில் 92.09 சதவீதமும் பதிவாகி இருந்தது. 90 சதவீதத்திற்கும் மேல் ஏராளமான தொகுதியில் வாக்குப்பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகின்றன.


Tags : Tripura , Tripura election, 88% voter turnout
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை