×

மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களில் இறந்த குழந்தை 120 கி.மீ ஸ்கூட்டரில் சடலத்தை கொண்டு சென்ற தம்பதியினர்: ஆம்புலன்ஸ் வராததால் விசாகப்பட்டினத்தில் பரிதாபம்

திருமலை ஆந்திராவில் விசாகாப்பட்டினத்தில் இறந்த குழந்தையின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல வழியின்றி 120 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், முஞ்சிங்கிப்புட்டு மண்டலம் குமடாவை சேர்ந்த தம்பதி மகேஸ்வரி- கொண்டபாபு. மகேஸ்வரி 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 20 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவ மனையில் 15 தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.   பிறந்தது முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்    குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தையின் சடலத்தை  வீட்டிற்கு எடுத்துச் செல்ல குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் ஆம்புலன்சை கேட்டனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.  இதனால் தங்கள் ஊருக்கு , குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி, ஸ்கூட்டரில் தம்பதியர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 120 கி.மீ தொலைவு சென்ற நிலையில் அவர்கள் படேரு நகரை அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆம்புல்ன்ஸ் ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையுடன் ஸ்கூட்டியில் சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா கூறுகையில், ‘பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை இறந்துவிட்டதாக வாய்மொழியாக தகவல் வந்ததாகவும், பதிவேடு வேலை செய்ய சிறிது நேரம் ஆகும். குழந்தையின் சடலத்தை கொண்டு செல்ல வாகனங்களை தயார் செய்து வந்தனர்.

மருத்துவமனை கேஸ் ஷீட்கள் எங்களுக்கு கிடைத்த 15 நிமிடங்களில் வாகனம் ஏற்பாடு செய்யப்படும்.  வாகனத்தை ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியில் சென்று விட்டனர்.    இரண்டு முறை போன் செய்தபோது நாங்கள் ஸ்கூட்டியில்  கிளம்பிவிட்டோம் என்றனர். இதனால் படேருவில் பேசி வாகனத்தை ஏற்பாடு செய்தோம்’ என்றார்.

Tags : Visakhapatnam , Hospital, baby dies in 15 days, couple carries dead body on scooter, pity in Visakhapatnam
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!