×

இங்கிலாந்து முன்னிலை: திணறலில் நியூசிலாந்து

மவுண்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று மவுண்ட் மவுங்கானுயில்  நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 ஓவரிலேயே 4 ரன்னை எடுத்திருந்த ஜாக் கிரெவ்லியை இழந்தது.

மற்றவர்கள் தடுமாறினாலும்  பென் டக்கெட் 84,  ஒல்லி போப் 42,  ஹாரி புரூக் 89,  பென் ஃபோக்ஸ்  38 ரன் விளாச ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இங்கிலாந்து தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை 58.2ஓவரில்  9 விக்கெட் இழப்புக்கு 325ரன்  எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. நியூசி அணியின் வாக்னர் 4,  கேப்டன் சவுத்தீ, அறிமுக வீரர் ஸ்காட் தலா 2, மற்றொரு அறிமுக வீரர் டிக்னெர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 18ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 37ரன் எடுத்துள்ளது.  ஆண்டர்சன் 2, ராபின்சன் ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். இங்கிலாந்தை விட 288ரன் பின்தங்கிய நிலையில் களத்தில் உள்ள நியூசி வீரர்கள் கான்வே 18,  வாக்னர் 4 ரன்னுடன் முதல் இன்னிங்சை 2வது நாளான இன்று தொடர்வார்கள்.


Tags : England ,New Zealand , England lead: New Zealand in trouble
× RELATED ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி