×

தொடருமா இந்தியா ஆதிக்கம்: இன்று 2வது டெஸ்ட் ஆரம்பம்.! அணை போடுமா ஆஸி

டெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸி அணி 4 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியி்ல இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அதனால் டெஸ்ட் தொடரில் 1-0  என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஆட்டம் டெல்லி   அருண் ஜெட்லி(பெரோஷோ கோட்லா)  அரங்கில் இன்று காலை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இமாலய வெற்றி தந்த உற்சாகத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான  இந்திய அணி களம் காண காத்திருக்கிறது. ரோகித் சர்மா விளாசிய சதமும், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அக்சர் இருவரும் குவித்த ரன்னும் இந்த டெஸ்ட்டிலும் தொடரக்கூடும். கூடவே  அஷ்வின், ஜடேஜா, ஷமி, சிராஜ், அக்சர்  விக்கெட் வேட்டையும்  இந்தியாவின் ஆதிக்கத்தை தொடர உதவும்.

அப்படி நடந்தால்  இந்திய வெற்றி எளிதாகும், தொடரில் முன்னிலையும் தொடரும். இந்தியஅணி  இப்போது வலுவாக இருப்பதால்  அணியில் மாற்றமிருக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் மீண்டும் அணிக்கு திரும்பும் ஸ்ரேயாசுக்கு பதிலாக வெளியில் உட்காரப் போவது என்பதுதான் தொடரும் கேள்வி. முதல் டெஸ்ட்டில்  எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத  அறிமுக வீரர்கள் சூரியகுமார், கர் பரத் ஆகியோரில் ஒருவர் வெளியில் உட்காரும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில்  ஒரே டெஸ்ட்டில் மட்டும் தரப்படும் வாய்ப்பை பொறுத்து திறமையை முடிவு செய்ய முடியாது  என்பதால் இவர்கள் மீண்டும் களமிறங்க கூடும். அப்படி நடந்தால் ராகுல் உட்கார வைக்கப்படலாம். எப்படி நடந்தாலும் இந்திய அணியில் பெரிய மாற்றம் இ ருக்க வாய்ப்பில்லை. ஆனால்  பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் கட்டாயம் மாற்றம் இருக்கக் கூடும்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எடுபடாத மேட் ரென்ஷா நீக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஸ்காட் பொலாந்து, நாதன் லயன் உட்பட மேலும் சிலரும் ‘வெளியே’ பட்டியலில்  உள்ளனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஜோஷ், டிராவிஸ் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளனர். எந்த மாற்றம் இருந்தாலும்  முன்னணி வீரர்கள் லபுஷேன், ஸ்மித், கவாஜா, வார்னர்,கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே  இந்தியாவின் வெற்றிக்கு அணை போட முடியும். அதற்கு உறுதுணையாக  அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே   விக்கெட்களை அள்ளிய  டோட் மர்பி இருப்பார். இந்தியா வென்றால் தொடரை வெல்லும் வாய்ப்பை  அதிகரிக்கும், ஆஸி வென்றால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்கும்.  கூடவே  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில்  இரு அணிகளுக்கும் வெற்றி அவசியம்.  அதற்காக 2 அணிகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Tags : India ,Aussie , Will India's dominance continue: 2nd Test starts today! Will Aussie put up a dam?
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...