×

துவரங்குறிச்சி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த நல்லூர் காட்டு மலைப்பகுதியில் நேற்றிரவு காட்டெருமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த துவரங்குறிச்சி வனத்துறையினர், இறந்த காட்டெருமையை ஆய்வு செய்தனர். ஆய்வில், காட்டெருமைக்கு பதினான்கு வயது  இருக்கும் என்பதும், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காட்டெருமை உடல் அப்பகுதியிலேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

Tags : Bison ,Dwarankurichi , Bison found dead in Dwarankurichi forest
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்