தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி 75 லட்ச ரூபாய் மோசடி: அரசு பள்ளி ஹெச்.எம். கைது

உளுந்தூர்பேட்டை: தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 75 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வருடங்களாக தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 75 லட்சம் வரையில் மோசடி நடந்துள்ளதாக உளுந்தூர்பேட்டை அருகே பின்னல்வாடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் (52) மீது பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு மாத காலமாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த செந்தில்குமரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: