×

மசினகுடியில் 2 சென்ட் நிலத்துடன் இலவச தொகுப்பு வீடுகள் திட்டம்: மக்கள் மகிழ்ச்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடியில் இரண்டு சென்ட் நிலம் 2.70 லட்சம் நிதி உதவியுடன் 283 பேருக்கு இலவசம் வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் மசினகுடியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் 144 தொகுப்பு வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது அதன் பின்பு 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் சமத்துவபுர திட்டத்தின் கீழ் 283 பேருக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் தல இரண்டு சென்ட் நிலம் ஒன்றிய அரசு வழங்கும் நிலம் 2.70 லட்சம் நிதி உதவியுடன் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளன. வீடுகள் கட்டுவதற்கு இடமும், பணமும் இல்லாமல் தவித்து வந்த தங்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கும் நிதி உதவி வழங்கி ஒன்றிய அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதில் மூன்று மாதத்தில் வீடுகள் கட்டிமுடிக்க காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   


Tags : Mazinagudi , Free Packaged Houses Scheme with 2 Cent Land in Masinagudi: People's Happiness
× RELATED மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர்...