விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் கருங்கல் சிவலிங்கம், குழவிகள் கண்டுபிடிப்பு: வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே தென்பண்ணை ஆற்றில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவெண்ணைநல்லூரை அடுத்த ஏனாதிமங்கலம் தென்பண்ணை ஆற்றுப்பாலத்தில் உடைந்த ஷட்டர் உள்ளது. அதன் அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது மணலில் புதைந்த நிலையில் பாறை போன்ற பொருள் தென்பட்டது. இதை கண்டா சிறுவர்கள் அந்த தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் மணலை தோண்டி பார்த்தனர். இந்நிலையில், மணலை தோண்டி பார்த்தபோது கருங்கல் ஆன மேல்பகுதி சிறிது உடைந்த நிலையில் சிவலிங்கம் இருந்தது. மேலும், குழவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Related Stories: