×

தென்காசி, ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி வெடித்து 2 பேர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி, ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி வெடித்து இருவர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த பாலு தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியை கொடுத்துள்ளார். ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று பாறையை தகர்க்கும் நோக்கில் வெடியை வைத்து சோதனை செய்துள்ளனர். சோதனை முயற்சியின் போது 4 தொழிலாளர்கள் இருந்த நிலையில் வெடி எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் ஆனையப்பப்புரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அரவிந்த் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த மற்ற தொழிலாளிகளை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மற்றொரு தொழிலாளி அசீர் சாம்சன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்ற 2 தொழிலாளிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் விவசாய நிலத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.     




Tags : Pudupatti ,Alangulam ,South Kasi , Tenkasi, Alankulam, Pudupatti, Well, Casualty
× RELATED விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர்...