×

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தலின்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் முகமது நசீமுத்தீன் ஆலோசனையின்படி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மாரிமுத்து தலைமையில் தொழில் நல்லுறவு பரிசு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ‘தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை’ ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இம்முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் இருந்து (http://www.labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.  ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250ம் கருவூல வலைத்தளத்தில் (https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan) e-challan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்து சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.


Tags : Government , Industrial Relations Award, Govt., Invitation to Apply
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...