இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகம் மூடல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மோசமடைந்து வரும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி சீன அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், “தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகம் பிப்ரவரி 13 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: