நாகர்கோவில் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது: சிபிசிஐடி வாதம்

மதுரை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி வாதிட்டது. காசியிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப் உள்ளிட்டவற்றில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்தன. செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் 1,900 ஆபாச புகைப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜாமீன் மனுவை உத்தரவிற்காக நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: