×

வளர்ப்பு நாய் தான் டிவிட்டரின் அடுத்த சிஇஓ: எலான் மஸ்க்கின் அடுத்த தடாலடி அறிவிப்பு

கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் கிண்டலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அனைவரது கவனத்தையும் பெறுவதற்காக தொடர்ந்து எதையாவது அறிவித்து வரும் மஸ்க் டிவிட்டரின் சிஇஓ பொறுப்பு தனது நாய் குட்டிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

யாரோ ஒருவர் நீங்கள் டிவிட்டரை வாங்க வேண்டும் என்று பதிவிட்டதற்காக உண்மையிலேயே அந்த நிறுவனத்தை வாங்குவதாக அதிரடியாக அறிவித்தவர் எலான் மஸ்க். ஆனால், அதையும் நேரடியாக செய்யாமல் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் சரியில்லை. செயலியில் பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி கோர்ட் வாசல் வரை இழுத்து சென்றார். முடிவில் நீங்கள் டிவிட்டரை வாங்கித்தான் ஆகவேண்டும் என நீதிமன்றங்கள் கூற சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அந்த நிறுவனத்தை தன் வசம்படுத்தினார் எலான் மஸ்க்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பவர் மஸ்க். கையில் இருக்கும் காசை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் டிவிட்டரை விளையாட்டாக வாங்கியவர் போன்று தான் மஸ்க்கின் அடுத்தடுத்த நடவடிக்கை இருந்தன. தொடக்கமே இப்படியா என டிவிட்டர் ஊழியர்கள் அதிர்ச்சி ஆகும் வகையில் முதல் நாளில் கையில் வாஷ்பேசினுடன் அலுவலகம் சென்றார். அந்த விடியோவை பதிவிடவும் செய்தார். ஒருபக்கம் இதுபோன்று ஜாலியாக தான் இனி டிவிட்டர் அலுவலகம் இருக்க போவதாக சிலர் பேசத்தொடங்கினர். அதை உடைக்கும் வகையில் அடுத்தடுத்து ஆட்குறைப்பு சிஇஓ உள்ளிட்ட உயரதிகாரிகள் பதிவு நீக்கம் என தனது மற்றோரு முகத்தையும் மஸ்க் காட்டத்தொடங்கினார்.

ஊழியர்கள் மட்டுமின்றி டிவிட்டர் பயனர்கள் ஷாக் ஆகும் வகையில் ப்ளூ டிக் இனி இலவசம் இல்லை என அறிவித்தார். இதனால்,  ப்ளூ டிக் இருந்தால் அதிகாரபூர்வ தகவல் மாறி போலி பயனர்களும் ப்ளூ டிக் வாங்கும் நிலைக்கு டிவிட்டரை கொண்டு வந்து நிறுத்தினார் மஸ்க். இதனால் ஊழியர்கள், பயனர்கள் என அனைத்து தரப்பு மத்தியிலும் மஸ்க் மீது அதிருப்தி எழுந்தது. அப்போது இந்த பொறுப்பில் இருந்து நீங்க விலக வேண்டும் என பயனர் கூற நான் விலகவா? வேண்டாமா? என டிவிட்டரில் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார். டிவிட்டர் பயனர்களோ நீங்க விலகுங்கள் என சிவப்பு கோடி காட்டினர். வாக்குகள் அவருக்கு எதிராக வந்ததால் இந்த முட்டாள் தனமான வேலைக்கு ஆள் கிடைத்த உடன் நாள் விலகிவிடுவேன் என சமாளித்தார்.

தற்போது அந்த பொறுப்பு வளர்ப்பு நாய் குட்டிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தடாலடியாக அறிவித்துள்ளார். சிஇஓ என்ற T-shirt-யுடன் நாய் குட்டி கண்ணாடி அணிந்து தன் முன்பு ஆவணங்களுடன் அமர்ந்துள்ள போட்டோக்களை ஷேர் செய்துள்ள மஸ்க் ஸ்டைலான தலைமை என்று வர்ணித்துள்ளார். டிவிட்டர் பயனர்களும் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இதுபோன்று சிறப்பான தலைமை எந்த நிறுவனத்திற்கும் அமையவில்லை என கிண்டலாக பதிவிட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவர் விளையாட்டாக இதனை செய்து வந்தாலும் ஒரு பெரும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அந்த பதவிக்கேற்ற பொறுப்போடு நடந்து கொள்வதாக பலர் மஸ்க்கை விமர்சித்து வருகின்றன.Tags : Twitter ,CEO ,Elan Musk , Pet, Dog, Twitter, CEO, Elon Musk, Announcement
× RELATED சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்