×

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு: ரூ.4 லட்சம், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் ரூ.4 லட்சம் பணம், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தேசிய புலனாய்வு முகாமையான என்.ஐ.ஏ. இன்று அதிரடியாக சுமார் 40 இடங்களில் கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாகவும், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் திருச்சி, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, திருவண்ணாமலை,திண்டுக்கல், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 32 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. இதேபோல மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை, திருப்பூர், எர்ணாகுளம், மைசூர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பல்வேறு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சுமார் ரூ.4 லட்சம் இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும், என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேவைபடும்பட்சத்தில் மீண்டும் இதுபோன்ற சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : NIA ,Tamil Nadu ,Karnataka ,Kerala , Tamil Nadu, Karnataka, Kerala, N.I.A. Test completed, electronic devices seized
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...