புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா தனியார் டி.வி. சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி உளளார். கோஹ்லி- ரோகித்சர்மா இடையே ஈகோ யுத்தம் இருந்தது. கங்குலி ரோகித்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், கோஹ்லியை கங்குலிக்குப் பெரிதாகப் பிடிக்காது. டி20 அணியில் இனி ரோகித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை.
அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு 80% உடற்தகுதியோடு கூட ஆடியிருக்கின்றனர், என அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது உண்மையில் சங்கடமாக இருக்கிறது. பிசிசிஐக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும். இது குறித்து விசாரணை நடத்தப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.