×

போடி அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுவட்டாரங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றுள்ளன. போடி அருகே உள்ள பல்லவராயன் பட்டி ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்போது விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாவட்ட ஆட்சியர் சஜீவனா ஆகியோர் பச்சை கொடி காட்டி போட்டியை துவக்கி வைத்தனர். முதலாவதாக பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. காளைகளை அடக்க 400வீரர்கள் களம்காண்கின்றனர். மாடுகளை அடக்குபவர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, குத்துவிளக்கு, பீரோ,எல்.இ.டீ டிவி, டைனிங் டேபிள், உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன. கலந்துகொண்டுள்ள மாடுகள் அனைத்துக்கும் சில்வர் அண்டா பரிசாக வழங்கப்படுகிறது.


Tags : Jallikattu ,Bodi , Bodi, 2 years, jallikattu competition
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்