×

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கினார் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே: குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே களமிறங்கியிருக்கிறார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரையும் தொடங்கி விட்டார். இந்நிலையில் அதே கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலேவும் அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார். அரசியலில் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிக்கி அதிபர் தேர்தலில் களமிறங்க போவதை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் நாடு முழுவதும் பயணித்து குடியரசு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வரும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த நிக்கி அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 51 வயதாகும் நிக்கி ஹாலே கடந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக பணியாற்றியவர். 2017 முதல் 2018 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராகவும் சேவையாற்றியவர் ஆவார். தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராக 2 முறை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. ஹாலே அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் குடியரசு கட்சியின் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும், கட்சியின் வெள்ளையர் அல்லாத முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமையும் பெறுவார்.   


Tags : Nikki Haley ,US Chancellor ,republican , American, President, Indian, Descent, Nikki Haley
× RELATED இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்