வாலாஜா: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு வடமாநில தொழிலாளர்களே காரணம் என்று வாலாஜாவில் சீமான் குற்றம்சாட்டினார். மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி வாலாஜாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் பேசியதாவது:புதிய கல்வி கொள்கை என்பது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் செயல் திட்டமாகும். இது மரண சாசனம்.
இதனை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். மதத்தை வைத்து மக்களை பாஜ பிரிக்கிறது. தமிழகத்தில் ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு வடமாநில தொழிலாளர்கள்தான் காரணம். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள விமான நிலையம் போதுமானது. அதனை சரி செய்தால் அதிகளவில் விமானங்கள் இயக்கலாம். ஈரோடு இடைத்தேர்தல் இன்றிலிருந்து களைகட்டும். இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பிபிசியின் குஜராத் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
